«பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள் » என்னும் தொடர் மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பிய பள்ளிகளில் தற்போதைய கற்பித்தல் முறைக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் கற்பித்தல் வழிமுறைகளை எடுத்துக் காட்டுகிறது. இத்தொடரின் பல்வேறு பாகங்கள் கற்பித்தலுக்கான பின்னணித் தகவல்களையும் பல பரிந்துரைகளையும் வழங்குகின்றன. புதிதாக உருவாக்கப்பெற்ற இணையத்தளத்தினூடாக அனைத்து உபகரணங்களும் இலகுவான முறையில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியவாறு உள்ளன. உலகெங்கும் பரந்து வாழும் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களின் கடினமான பணிக்கு ஆதரவளிப்பதே நோக்கமாகும்.