தாய்மொழியை வாசிக்கத் தெரியாதவர்கள் தமது எழுத்துருக்களை அணுக முடியாது. புலம்பெயர் குழந்தைகளுக்கு தாய்மொழியில் வாசிப்பது மிகவும் முக்கியமானதாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவதன் மூலம் வாசித்தலில் ஆர்வத்தைத் தூண்ட முடியும். சிறு வயதிலிருந்து அதிகமாக வாசிக்கும் குழந்தைகள் பின்னர் இலகுவாகக் கல்வி கற்க முடியும் என்பதை ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

«முதல் மொழியில் வாசிக்க ஊக்குவித்தல்» எனும் நூல் பா.மொ.க ஆசிரியர்கள் தமது மாணவர்களுடன் எவ்வாறு வாசித்தலை அணுகலாம் என்பதனை எடுத்துக் கூறுகிறது. ஆரம்பத்தில் மிக முக்கியமான சில கற்பித்தல் சார்ந்த குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் மாணவர்களை உதாரணமாக விளையாட்டுகளின் மூலமாகவோ அல்லது நூலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ எவ்வாறு வாசிக்க ஊக்குவிக்கலாம் என்பது பற்றி 30 எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளை சரியாகவும் விரைவாகவும் வாசிக்கத் தூண்டுதலுக்கான பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

Table of Contents