குழந்தைகளும் இளைஞர்களும் வேகமாக மாற்றமடைந்து வரும் இச்சூழலில் தம்மை வழிப்படுத்த வேண்டும். அறிவை சுயமாக வளர்த்துக்கொள்ளும் திறனைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. பள்ளியைப் பொறுத்த வரை, கற்றலுக்கான உத்திகளும் மதிநுட்பங்களும் அவர்களுக்கு அவசியமாக வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். இது பள்ளிகளின் வெற்றிக்கும் பங்களிக்கிறது.

«கற்பித்தல் கற்றல் மதிநுட்பங்களும் உத்திகளும்» எனும் நூல் வாழ்நாளில் இத் திறன்களின் முக்கியத்துவத்தையும் இத்திறன்களுக்கு பா.மொ.க. எவ்வாறு துணை புரியும் என்பதையும் ஒரு சுருக்கமான அறிமுகத்தின் மூலம் எடுத்துக் கூறுகிறது. இதில் மாணவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்கலாம், எவ்வாறு நல்ல சுருக்கங்களை எழுதலாம் மற்றும் எவ்வாறு மனவரைபடங்களை உருவாக்கலாம் என்பது போன்ற கற்பித்தற் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. 10 படிநிலைகளைக் கொண்ட பயிற்சித் திட்டத்தை மாணவர்களால் நிறைவு செய்ய முடியும். இத்திட்டத்தில் போதிய அளவு நித்திரை, உடற்பயிற்சி மற்றும் அமைதியான இடம் போன்றன கற்றலுக்கு மிகவும் அவசியமானவை என்பது வலியுறுத்தப்படுகின்றது.

Table of Contents