பாரம்பரிய மொழி கற்பித்தல் (பா. மொ. க.) என்பது என்ன?

பாரம்பரிய மொழி கற்பித்தல் (பா. மொ. க.) என்பது பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதல் அல்லது பாரம்பரிய மொழியில் வழங்கப்படும் மேலதிக அறிவுறுத்தலைக் குறிக்கிறது.

நாடு அல்லது இடத்தைப் பொறுத்து, பா.மொ. க. தாய்மொழி கற்பித்தல் அல்லது தாய்மொழி மற்றும் பண்பாட்டு அறிவுறுத்தல் என்றும் குறிப்பிடப்படுகிறது. பிரெஞ்சு மொழி பேசப்படும் பகுதிகளில் ELCO (enseignement de langue et culture d’origine) என்றும், ஆங்கிலம் பேசப்படும் பகுதிகளில் “supplementary school” எனவும் அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய மொழி வகுப்புகள் பொதுவாக ஆண்டு ஒன்று முதல் ஒன்பது வரை வழங்கப்படுகின்றன. அவை கூடுதலாக அரச பள்ளிகளில் வழக்கமான வகுப்புகளுக்குப் பின் அல்லது மதிய நேரங்களில், வாரத்தில் இரண்டு மணி நேரங்கள் நடைபெறும். பெரும்பாலும் ஒரே பா. மொ. க. வகுப்பில் வெவ்வேறு வயது மற்றும் இரண்டு அல்லது மூன்று தர நிலைகள் (மழலையர், கீழ் நிலை மற்றும் மேல் நிலை) மாணவர்கள் உள்ளனர். பா. மொ. க. வகுப்புகள் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன.

பா. மொ. க. வின் இலக்குகள் என்ன?

பாரம்பரிய மொழி கற்பித்தல் இரண்டு முக்கிய நோக்கங்களைப் பின்பற்றுகிறது: ஒருபுறம், மாணவர்கள் தங்கள் மொழி மற்றும் பண்பாட்டை வளர்ப்பதற்குத் துணைபுரிகின்றனர். மறுபுறம், பா. மொ. க. மாணவர்களின் நோக்குநிலை, பள்ளி அமைப்பு புலம்பெயர் நாட்டின் சமூகத்தில் ஒருங்கிணைப்பதற்குப் பங்களிக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்த பின் தங்கள் தாய்நாட்டிற்கு த் திரும்பாத அனைத்து மாணவர்களுக்கும் இது அவசியமானது. அதனால், சமசீர் இருமொழி மற்றும் இரு கலாச்சார அடையாளத்தை வளர்ப்பதில் பா.மொ.க. முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம், சமூகத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக பன்மொழிப் புலமையை வளர்ப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும் இது உதவுகிறது,

 

பா.மொ.க. வை யார் வழிநடத்துகின்றனர் மற்றும் அரச பள்ளி அமைப்புடன் எவ்வாறு இது ஒருங்கிணைக்கப்படுகிறது?

பிறந்த நாட்டைப் பொறுத்து பா.மொ.க. வகுப்புகள் புலம்பெயர் நாடு, துணைத் தூதரகங்கள் மற்றும் பிற நாடுகளின் தூதரகங்கள் அல்லது தனியார் நிறுவனங்களால் வழிநடத்தப் படுகின்றன. பாரம்பரிய மொழி ஆசிரியர்களின் ஊதியம் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப பெரிதும் மாறுபடும்.

பா.மொ.க. வகுப்புகள் உள்ளூர் அரச பள்ளி அமைப்பில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதும் அந்நாட்டைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக பா.மொ.க. பாடத்திட்டங்களை அரசபள்ளிகளின் கால அட்டவணையில் ஒருங்கிணைத்தல், பாரம்பரிய மொழி ஆசிரியர்கள் மற்றும் அரசபள்ளி மொழி ஆசிரியர்களுக்கு இடையேயான கூட்டுறவுத் திட்டங்கள், பா.மொ.க. ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட சேவையில் பயிற்சி இருப்பது மற்றும் அவர்களின் ஊதிய விகிதம் ஆகியவை இதற்கான அறிகுறிகள்.

பா.மொ.க. எவ்வகையான சவால்களை எதிர்கொள்கிறது?

பாரம்பரிய மொழி வகுப்புகள் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்கள் பின்வருமாறு:

  • அவர்கள் ஏராளமான ஓய்வு நேரப் பயன்பாட்டு வாய்ப்புகளுக்கு எதிராகப் போட்டியிடுகின்றனர். இதன் விளைவாக பா.மொ.க. மாணவர்களின் எண்ணிக்கை பல இடங்கலில் குறைந்து வருகிறது.
  • பாரம்பரிய மொழி வகுப்புகள் அரச பள்ளி அமைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இடத்தில் இது குறிப்பிடத்தக்க சிக்கலாகும்.
  • வகுப்புகள் பெரும்பாலும் வெவ்வேறு தரங்களையும் வெவ்வேறு வயதுகளையுமுடைய குழுக்களில் கற்பிக்கப்படுகின்றன.
  • வேலை விதிமுறைகள் மற்றும் ஊதியங்கள் பொதுவாக திருப்தியாக இல்லை.
  • அரச பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுடன் ஒத்துழைக்கும் வாய்ப்புகள் அரிதாகவே காணப்படும்