«முதல் மொழியில் வாசிக்க ஊக்குவித்தல்» எனும் நூல் பா.மொ.க ஆசிரியர்கள் தமது மாணவர்களுடன் எவ்வாறு வாசித்தலை அணுகலாம் என்பதனை எடுத்துக் கூறுகிறது. ஆரம்பத்தில் மிக முக்கியமான சில கற்பித்தல் சார்ந்த குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் மாணவர்களை உதாரணமாக விளையாட்டுகளின் மூலமாகவோ அல்லது நூலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ எவ்வாறு வாசிக்க ஊக்குவிக்கலாம் என்பது பற்றி 30 எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளை சரியாகவும் விரைவாகவும் வாசிக்கத் தூண்டுதலுக்கான பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பா.மொ.க. இங்கு சொற்களஞ்சியப் பணிகள் மற்றும் ஆக்கபூர்வமான மொழிப்பயன்பாடு மூலம் பங்களிக்க முடியும். வகுப்பில் வாய்மொழிப் பயன்பாடு மற்றும் ஜனநாயக விவாதப் பண்பாடு என்பன முக்கிய பங்கு அளிக்கின்றன.

«முதல் மொழியில் பேச ஊக்குவித்தல்» நூலில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு, கவிதைகள் மற்றும் சொல்லியங்கள் மூலம் உச்சரிப்பு மற்றும் கேட்டல் விளங்கிக்கொள்ளுதல் போன்றவை பயிற்சி செய்யப்படுகின்றன. உரையாடல்கள் மற்றும் எடுத்துரைப்புகள் போன்றன சிறந்த பயிற்சிகளை வழங்குகின்றன.

Table of Contents