பல்பண்பாட்டுத் தகைமை என்பது வெவ்வேறு பண்பாடுகள் மற்றும் மொழிகளுக்கிடையே தம்மைத் தாமே நோக்குநிலைப்படுத்தும் திறன் ஆகும். ஒரு பன்முக பண்பாட்டுச் சமூகத்தில் இது ஒரு மிக அவசியமான திறனாகும். அரச பள்ளிகளுடன் இணைந்து பா.மொ.க. வும் இதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.

«பல்பண்பாட்டுத் தகைமைகளை ஊக்குவித்தல்» நூல் இடப்பெயர்வு சார்ந்த அனுபவங்கள், அடையாளம், பண்பாடு மற்றும் மொழிப் பன்முகத்தன்மை சார்ந்த கேள்விகளை ஆராய்கிறது. மேலும் பல்பண்பாட்டுச் சமூகத்தில் ஒன்றாக வாழ்வது, அதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் ஜனநாயக தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. பல பின்னணி எழுத்துருக்கள் மற்றும் நடைமுறைக் கற்பித்தல் பரிந்துரைகளை இப்பகுதியில் காணலாம்.

Table of Contents