IPE என்பது

பாரம்பரிய மொழி கற்பித்தல் தொடரின் வெளியீடு சூரிச் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் (PH Zürich) கல்விக்கான சவதேச திட்டங்கள் (IPE) துறையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும். முக்கியமாக கிழக்கு ஐரோப்பா, பால்கன் மற்றும் ஆசியா, ஆபிரிக்காவில் கல்வியியல் வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புத் துறை செயற்பாட்டில் உள்ளது. ஆசிரியர் கல்விக்கான சூரிச் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக சுவிற்சர்லாந்து நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள புகழ்பெற்ற கல்வி நிபுணர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சியாளர்களின் தொகுப்பை IPE அணுகுகிறது. புலம்பெயர்ந்த பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளி மொழியைக் கற்பதில் சவால்களை எதிர்கொண்டாலும் அவர்களின் பாரம்பரிய மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவை ஆசிரியர் பயிற்சியின் முன்னணியில் உள்ளன. பாரம்பரிய மொழி கற்புத்தல் தொடரை உருவாக்குவதற்கு IPE ஆனது முறையியல் கல்வியியல் மற்றும் பன்மொழித் துறையில் வல்லுநர்களின் விரிவான வலையமைப்பைப் பயன்படுத்தியது. IPE இன் பணியின் மற்ற முக்கிய பகுதிகள் ஜனநாயக குடியுரிமை மற்றும் மனித உரிமைகளுக்கான கல்வி, வேலை நோக்குநிலை மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவை.

IPE பற்றி மேலும் அறிய

 

பாரம்பரிய மொழி கற்பித்தல் தொடரின் ஆசிரியர்கள்

பாரம்பரிய மொழி கற்பித்தலுக்கான உத்திகளை வெளியிடுவதற்கு பக்கபலமாக இருந்தவர் பேராசிரியர் முனைவர் முனைவர் பாசில் ஷாடர் அவர்கள். இவர் முன்னர் ஜெர்மனை மொழியை முதல்மொழி, இரண்டாவது மொழி மற்றும் பல்பண்பாட்டு தகைமைகளுக்குரிய ஆசிரிய பயிற்சியாளராக சூரிச் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அத்தோடு இவர் பல நூல்களையும் கற்பித்தல் உத்திகளையும் உருவாக்கியதோடு இரண்டாவது முனைவர் பட்டத்தினையும் திரனா பல்கலைக்கழகத்தில் அல்பானிய மொழியில் பெற்றுக்கொண்டமையால் பாரம்பரிய மொழி கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய நுண்ணறிவு மிக்கவராகத் திகழ்கிறார். இவரது சிறந்த அறிவை இவர் அல்பானிய மொழி கற்பித்தல் ஆசிரியர்களின் கூட்டுறவின் மூலம் பெற்றுக்கொண்டார். இவர் பன்மொழிகளைக் கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லுனராகத் திகழ்கிறமையால் இவர் பல விற்பன்னர்களுடனான கூட்டுறவிலும் ஈடுபட்டு அவர்களது அறிவுறுத்தல்களின் மூலம் பாரம்பரிய மொழி கற்பித்தலுக்கான உத்திகளை உருவாக்க முடிந்தது.

பேராசிரியர் முனைவர் முனைவர் பாசில் ஷாடர் பற்றிய மேலதிக தகவல்கள்