சூரிச் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் (PH Zürich) என்பது சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தின் உள்ள ஆசிரியர்களுக்கான கல்வி மற்றும் ஆசிரிய சேவைக்கான பயிற்சி நிறுவனம் ஆகும்.

PH சூரிச் 2002 இலையுதிர்காலத்தில் இருந்து செயற்பாட்டில் உள்ளதோடு மற்றும் பதினொரு முந்தைய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் இணைப்பிலிருந்து வளர்ந்தது. இது பயன்பாட்டு அறிவியலில் பல்கலைக்கழகங்களின் சூரிச் சங்கத்திற்கு சொந்தமானது மற்றும் பின்வரும் செயற்பாட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • அனைத்து நிலைகளுக்குமான வருங்கால ஆசிரியர்களுக்கான பயிற்சி
  • பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை
  • ஆய்வு மற்றும் சேவைகள்
  • தற்போது PH சூரிச்சில் ஏறத்தாழ 3300 மாணவர்கள் மற்றும் 600 ஆசிரியர்கள், அறிவியல் ஒத்துழைப்பாளர்கள்

மற்றும் உதவியாளர்கள் மற்றும் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் செயற்பாடுகளில் (முழு அல்லது பகுதி நேரமாக) 230 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் PH வின் மேலதிக கல்வி, தொழில்முறை மேம்பாடு, ஆலோசனை மற்றும் பயிற்சி சேவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 12000 விண்ணபங்கள் கிடைக்கின்றன.

 

ஆதாரம்: PHZH