முதல் மொழியில் வாசிக்க ஊக்குவித்தல்
பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள் : பரிந்துரைகள் 2
தாய்மொழியை வாசிக்கத் தெரியாதவர்கள் தமது எழுத்துருக்களை அணுக முடியாது. புலம்பெயர் குழந்தைகளுக்கு தாய்மொழியில் வாசிப்பது மிகவும் முக்கியமானதாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவதன் மூலம் வாசித்தலில் ஆர்வத்தைத் தூண்ட முடியும். சிறு வயதிலிருந்து அதிகமாக வாசிக்கும் குழந்தைகள் பின்னர் இலகுவாகக் கல்வி கற்க முடியும் என்பதை ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
«முதல் மொழியில் வாசிக்க ஊக்குவித்தல்» எனும் நூல் பா.மொ.க ஆசிரியர்கள் தமது மாணவர்களுடன் எவ்வாறு வாசித்தலை அணுகலாம் என்பதனை எடுத்துக் கூறுகிறது. ஆரம்பத்தில் மிக முக்கியமான சில கற்பித்தல் சார்ந்த குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் மாணவர்களை உதாரணமாக விளையாட்டுகளின் மூலமாகவோ அல்லது நூலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ எவ்வாறு வாசிக்க ஊக்குவிக்கலாம் என்பது பற்றி 30 எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளை சரியாகவும் விரைவாகவும் வாசிக்கத் தூண்டுதலுக்கான பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
Table of Contents
- நூல் தொடரின் முன்னுரை "பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்"
- அறிமுகம்
- I. பகுதி I: படித்தலை ஊக்குவித்தல்
- 1. ஒரு கடமை போல் உரத்துப் படித்தல்
- 2. முதல்மொழியில் சிறிய நூலகமொன்றை அமைத்தல்
- 3. “Bibliomedia” போன்ற அமைப்புக்களிலிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளல்
- 4. ஒரு நூலகத்தைப் பார்வையிடுதல்
- 5. டோமினோ நூல்
- 6. முதல் வாக்கியங்கள்
- 7. கருதுகோள்களை உருவாக்குதல்
- 8. வண்ணப் பைகளில் நூல்கள்
- 9. கட்டற்ற படிப்புத்தொடர்கள் (தனிப்பட்ட படித்தல்கள்)
- 10. உரத்துப் படித்து மற்றவர்களுக்கான ஒலிப்பதிவு செய்தல்
- 11. குழுக்களாக அல்லது வகுப்பாகப் படித்தல்
- 12. எனது நூலை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
- 13. விடுகதை முடிச்சு
- 14. எழுத்தாக்கங்கள் பற்றிய வினாக்களை உருவாக்குதல்
- 15. ஒரு நூலுக்கான சுவரொட்டியொன்று உருவாக்குதல்
- 16. "நூல் ஸ்லாம் (Slam)"
- 17. "நூல் பற்றிய அறிமுகச்சந்திப்பு (Dating)"
- 18. உரத்துப் படித்தல்: ஒரு சுய மதிப்பீடு
- 19. ஒருவர் தான் படித்ததை மீட்டுப்பார்த்தல்
- II. பகுதி II: பகுதி படித்தற் பயிற்சி
- III. பகுதி III: இலக்கியப்பண்பாட்டுக் கல்வி
- 5. நூற்பட்டியல்