கற்பித்தல் கற்றல் மதிநுட்பங்களும் உத்திகளும்
பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்: பரிந்துரைகள் 5
குழந்தைகளும் இளைஞர்களும் வேகமாக மாற்றமடைந்து வரும் இச்சூழலில் தம்மை வழிப்படுத்த வேண்டும். அறிவை சுயமாக வளர்த்துக்கொள்ளும் திறனைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது. பள்ளியைப் பொறுத்த வரை, கற்றலுக்கான உத்திகளும் மதிநுட்பங்களும் அவர்களுக்கு அவசியமாக வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். இது பள்ளிகளின் வெற்றிக்கும் பங்களிக்கிறது.
«கற்பித்தல் கற்றல் மதிநுட்பங்களும் உத்திகளும்» எனும் நூல் வாழ்நாளில் இத் திறன்களின் முக்கியத்துவத்தையும் இத்திறன்களுக்கு பா.மொ.க. எவ்வாறு துணை புரியும் என்பதையும் ஒரு சுருக்கமான அறிமுகத்தின் மூலம் எடுத்துக் கூறுகிறது. இதில் மாணவர்கள் எவ்வாறு சிறப்பாகக் கற்கலாம், எவ்வாறு நல்ல சுருக்கங்களை எழுதலாம் மற்றும் எவ்வாறு மனவரைபடங்களை உருவாக்கலாம் என்பது போன்ற கற்பித்தற் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. 10 படிநிலைகளைக் கொண்ட பயிற்சித் திட்டத்தை மாணவர்களால் நிறைவு செய்ய முடியும். இத்திட்டத்தில் போதிய அளவு நித்திரை, உடற்பயிற்சி மற்றும் அமைதியான இடம் போன்றன கற்றலுக்கு மிகவும் அவசியமானவை என்பது வலியுறுத்தப்படுகின்றது.
Table of Contents
- நூல் தொடரின் முன்னுரை "பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்"
- அறிமுகம்
- பகுதி I: பல்வேறு துணைப்பாடங்களுக்கான கற்றல் மதிநுட்பங்களும் உத்திகளும்
- 1. பொதுப் பயிற்சிகளுக்கான உத்திகளும் மதிநுட்பங்களும் (M1–4)
- 2. கற்றல் துணைக்கருவிகளைப் பயன்படுத்துதற்கான உத்திகளும் மதிநுட்பங்களும் (அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், இணையம்) (M5–7)
- 3. படித்தலுக்கான உத்திகளும் மதிநுட்பங்களும் (M8–10)
- 4. எழுதுதலுக்கான உத்திகளும் மதிநுட்பங்களும் (M11–13)
- 5. எடுத்துரைப்புகளுக்கும் தேர்வுகளுக்கும் ஆயத்தம் செய்வதற்கான உத்திகளும் மதிநுட்பக்களும் (M14–15)
- பகுதி II: வெற்றிகரமான கற்றலுக்கு 10-படிமுறைப் பயிற்சித் திட்டம்
- S1. படிமுறை 1: போதிய உறக்கமும் உடற்பயிற்சியும்
- S2. படிமுறை 2: ஆரோக்கியமான உணவு, நிறைவான காலை உணவு
- S3. படிமுறை 3: வீட்டில் உங்கள் பணி செய்யுமிடம்
- S4. படிமுறை 4: அமைதியான பணியிடம்
- S5. படிமுறை 5: நிலையான வேலை நேரம்
- S6. படிமுறை 6: பணியினைத் திட்டமிடல்: அ) திட்டமொன்றை அமைத்தல்
- S7. படிமுறை 7: பணியினைத் திட்டமிடல்: ஆ) இலக்குகளையும் துணை இலக்குகளையும் அமைத்தல்
- S8. படிமுறை 8: வேலையைத் தொடங்குதல்
- S9. படிமுறை 9: ஒருநிலைப்பட்ட முறையில் வேலை செய்தல், இடைவேளைகளை எடுத்தல்
- S10. படிமுறை 10: எப்போதாவது உங்களுக்கு முற்றிலும் ஆவல் இல்லாத போது...