முதல் மொழியில் பேச ஊக்குவித்தல்
பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்: பரிந்துரைகள் 3
«முதல் மொழியில் வாசிக்க ஊக்குவித்தல்» எனும் நூல் பா.மொ.க ஆசிரியர்கள் தமது மாணவர்களுடன் எவ்வாறு வாசித்தலை அணுகலாம் என்பதனை எடுத்துக் கூறுகிறது. ஆரம்பத்தில் மிக முக்கியமான சில கற்பித்தல் சார்ந்த குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் மாணவர்களை உதாரணமாக விளையாட்டுகளின் மூலமாகவோ அல்லது நூலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ எவ்வாறு வாசிக்க ஊக்குவிக்கலாம் என்பது பற்றி 30 எடுத்துக்காட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளை சரியாகவும் விரைவாகவும் வாசிக்கத் தூண்டுதலுக்கான பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
பா.மொ.க. இங்கு சொற்களஞ்சியப் பணிகள் மற்றும் ஆக்கபூர்வமான மொழிப்பயன்பாடு மூலம் பங்களிக்க முடியும். வகுப்பில் வாய்மொழிப் பயன்பாடு மற்றும் ஜனநாயக விவாதப் பண்பாடு என்பன முக்கிய பங்கு அளிக்கின்றன.
«முதல் மொழியில் பேச ஊக்குவித்தல்» நூலில் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு, கவிதைகள் மற்றும் சொல்லியங்கள் மூலம் உச்சரிப்பு மற்றும் கேட்டல் விளங்கிக்கொள்ளுதல் போன்றவை பயிற்சி செய்யப்படுகின்றன. உரையாடல்கள் மற்றும் எடுத்துரைப்புகள் போன்றன சிறந்த பயிற்சிகளை வழங்குகின்றன.
Table of Contents
- நூல் தொடரின் முன்னுரை "பாரம்பரிய மொழி கற்பித்தற் கருவிகள்"
- 1. அறிமுகம்
- 2. பகுதி I: ஒலியியல் பயிற்சி; ஆக்கபூர்வமான மொழிப் பயன்பாடடு உத்திகள்
- 1. ஒலியியல் பயிற்சி, ஒலிகளை வேறுபடுத்தும் ஐந்து பயிற்சிகள்
- 2. "தமிழி கூறுகிறாள்..."
- 3. "நீ காணாத ஒன்றை நான் காண்கிறேன்"
- 4. "ஒருவரைக் கண்டுபிடி..."
- 5. "சூட்டு இருக்கை"
- 6. மழலையர் பாக்கள் மற்றும் இயைபுப் பாடல்கள்; கவிதைகள் மற்றும் செய்யுள்
- 7. நாப்பிறழ்வு அடிகள், மொழி விளையாட்டு
- 8. எளிமையான வகிபாக விளையாட்டுகள்
- II. பகுதி II: உரையாடல்களில் இணையர்களாகவும் குழுக்களாகவும் முறையாகத் தம்மை நடத்திக்கொள்ளுதல்
- 9. உரையாடல் விதிமுறைகளை உருவாக்குதலும் பயிற்சி செய்தலும்
- 10. தம்மை உரையாடலுக்கு முன்னாயத்தம் செய்தல்?
- 11. "எண்ணு-இணை-பகிர்": குழுக் கலந்துரையாடல் ஒன்றுக்குத் தன்னை ஏற்பாடு செய்தற்கு ஒரு மாற்று நடைமுறை
- 12. கலந்துரையாடல்களில் மற்றவர்களின் பங்களிப்புடன் இணைதல்
- 13. பின்னூட்டல் வழங்குதல்
- 14. கலந்துரையாடல் வகிபாகங்களை ஏற்றுக்கொள்ளல
- 15. கலந்துரையாடல் தலைமை வகிபாகத்தினை ஏற்றுக்கொள்ளுதல்
- 16. உரையாடலைத் திட்டமிடல்
- 17. வட்டமாக இருந்து கதை சொல்லுதல்
- 18. கலந்துரையாடலும் கருத்தாடலும்
- 19. கற்றல் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துதல்
- 20. கூட்டாக மெய்ப்பொருள் காணுதல்
- 21. ஒரு கருத்துக்கணிப்புக்கு அல்லது நேர்காணலும் ஏற்பாடு செய்தல்
- III. பாடல் III: டல்பட்டறிவுகளையும் கதைகளையும் கூறி அளிக்கை செய்தல்
- IV. பகுதி IV: எடுத்துரைப்பும் விரிவுரையாற்றலும்
- 6. நூற்பட்டியல்